Home உலகம் புலம்பெயர்ந்தோருக்கு மில்லியன் டொலர்கள் அபராதம் : ட்ரம்ப் அதிரடி

புலம்பெயர்ந்தோருக்கு மில்லியன் டொலர்கள் அபராதம் : ட்ரம்ப் அதிரடி

0

அமெரிக்காவிலுள்ள (United States) புலம்பெயர்ந்தோருக்கு எதிராக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) நிர்வாகம், 1.8 மில்லியன் டொலர்கள் வரை அபராதம் விதித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது குறித்து 4,500 புலம்பெயர்ந்தோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாடுகடத்தும் இறுதி உத்தரவு வழங்கப்பட்ட பின்னரும் அமெரிக்காவை விட்டு வெளியேறாத புலம்பெயர்ந்தோருக்கே இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசின் திட்டம் 

அதிகபட்சமாக 1.8 மில்லியன் டொலர்களிலிருந்து குறைந்தபட்சம் 5,000 டொலர்கள் வரையில், சுமார் 4,500 புலம்பெயர்ந்தோருக்கு விதிக்கப்பட்டுள்ள மொத்த அபராதத்தொகை, சுமார் 500 மில்லியன் டொலர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அபராதத்தை 30 நாட்களுக்குள் செலுத்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதால், பலர் கலக்கமடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

புலம்பெயர்ந்தோருக்கு கடுமையான அபராதம் விதித்தால், வேறு வழியில்லாமல் அவர்களாகவே நாட்டைவிட்டு வெளியேறிவிடுவார்கள் என்பதே ட்ரம்ப் அரசின் திட்டம் எனவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version