Home உலகம் ஆசிய நாடொன்று தொடர்பில் அமெரிக்க பயணிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

ஆசிய நாடொன்று தொடர்பில் அமெரிக்க பயணிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

0

பங்களாதேஷ் (Bangladesh) செல்லும் தனது நாட்டு பயணிகளுக்கு அமெரிக்க (USA) அரசு முக்கிய அறிவுறுத்தல் ஒன்றை விடுத்தாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி, பங்களாதேஷின் காக்ராச்சாரி, ரங்கமதி மற்றும் பந்தர்பன் உள்ளிட்ட சிட்காங் மலைப்பகுதிகளில் பயணம் செய்ய வேண்டாம் என்று அமெரிக்க அரசு அறிவுறுத்தியுள்ளது.

பங்களாதேஷில் கடந்த வருடம் முகமது யூனுஸ் தலைமயிலான இடைக்கால அரசு பொறுப்பேற்றதில் இருந்து அந்நாட்டில் சிறுபான்மையினரான இந்துக்கள் மீது தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

அமெரிக்க அரசின் எச்சரிக்கை

அத்துடன், தற்போது பங்களாதேஷின் தினாஜ்பூர் மாவட்டத்தில் இந்து சமூகத்தின் முக்கிய தலைவர்பபேஷ் சந்திர ராய் மர்ம நபர்களால் கடத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இந்துக்களின் பாதுகாப்பு குறித்து மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும், அந்நாட்டில் பலஸ்தீன தாக்குதல்களை கண்டித்து இஸ்ரேலுக்கு எதிரான போராட்டங்களும் நடந்து வருகின்றன.

இதை தொடர்ந்தே பங்களாதேஷ் செல்லும் தனது நாட்டு பயணிகளை அமெரிக்க அரசு எச்சரித்துள்ளது.

வன்முறை சம்பவங்கள்

இந்நிலையில், அமெரிக்க அரசு ஆலோசனைக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், “வகுப்புவாத வன்முறை, குற்றச் சம்பவங்கள், தீவிரவாதம், கடத்தல் மற்றும் பிற பாதுகாப்பு அபாயங்கள் காரணமாக பயணிகள் இந்தப் பகுதிக்குச் செல்லக்கூடாது.

இந்தப் பகுதியில், குடும்ப தகராறுகளால் தூண்டப்பட்ட கடத்தல்கள் மற்றும் மத சிறுபான்மையினரை குறிவைத்து கடத்தல்கள் நடந்துள்ளன. பிரிவினைவாத அமைப்புகள் மற்றும் அரசியல் வன்முறைகளும் இப்பகுதிக்கு வருபவர்களுக்கு கூடுதல் அச்சுறுத்தல்களை ஏற்படுத்துகின்றன.

அதேபோன்று, IED குண்டுவெடிப்புக்கள் மற்றும் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களும் நடந்துள்ளன. போராட்டங்கள் வன்முறை மோதல்களுக்கு அதிக வாய்ப்புள்ளது. எனவே அமெரிக்கர்கள் அங்கு செல்வதைத் தவிருங்கள் ” என அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version