Home உலகம் பாகிஸ்தானைச் சேர்ந்த 04 நிறுவனங்களுக்கு பொருளாதாரத் தடை விதித்த அமெரிக்கா

பாகிஸ்தானைச் சேர்ந்த 04 நிறுவனங்களுக்கு பொருளாதாரத் தடை விதித்த அமெரிக்கா

0

நீண்ட தூரம் சென்று தாக்குதல் நடத்தும் ஏவுகணை தயாரிப்பு திட்டத்தில் ஈடுபட்டுள்ள பாகிஸ்தானைச் (Pakistan) சேர்ந்த 4 நிறுவனங்களுக்கு எதிராக அமெரிக்கா (United States) பொருளாதாரத் தடை விதித்துள்ளது.

இவ்விடயம் தொடர்பில் அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில்,

பாகிஸ்தானின் அணு ஆயுதம் கொண்ட நீண்டதூர ஏவுகணைத் திட்டம் தொடர்பாக அந்நாட்டின் மீது புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.

ஏவுகணைத் திட்டம்

பாகிஸ்தானின் ஏவுகணைத் திட்டத்தை மேற்பார்வையிடும் அரசாங்கத்திற்குச் சொந்தமான தேசிய மேம்பாட்டு நிறுவனம் உள்ளிட்ட 4 நிறுவனங்கள் மீதே பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாகப் பாகிஸ்தான் வெளியுறவுதுறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில்,

நீண்ட தூரம் சென்று தாக்குதல் நடத்தும் ஏவுகணைத் திட்டத்தில் ஈடுபட்டுள்ள என்டிசி மற்றும் 3 வர்த்தக நிறுவனங்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடையானது துரதிஷ்டவசமானது மற்றும் ஒரு தலைபட்சமானது.

அமெரிக்க அரசின் இந்த செயற்பாடு மிகவும் வருத்தமளிக்கிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version