சிரியாவில் உள்ள ஐஎஸ் ஐஎஸ் பயங்கரவாதக் குழு மீது அமெரிக்க இராணுவம் பாரிய தாக்குதலை நடத்தியுள்ளது.
அமெரிக்கப் படைகள் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதலுக்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது
குறித்த விடயத்தை பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் உறுதிப்படுத்தி உள்ளார்.
கடுமையான தாக்குதல்
ஐஎஸ் போராளிகள், உட்கட்டமைப்பு மற்றும் ஆயுதத் தளங்களை அழிப்பதை நோக்கமாகக் கொண்டு குறித்த தாக்குதல் நடத்தப்படுவதாக பாதுகாப்புச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி ட்ரம்பின் தலைமையிலான அமெரிக்கா, நமது மக்களைப் பாதுகாக்க ஒருபோதும் தயங்காது மற்றும் பின்வாங்காது என்றும் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார்.
மத்திய சிரியாவில் போர் விமானங்கள், ஹெலிகொப்டர்கள் மற்றும் பீரங்கிப் படைகள் பல இலக்குகளைத் தாக்கியதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டிசம்பர் 13 அன்று பல்மைரா நகரில் நடத்தப்பட்ட ஐஎஸ் தாக்குதலில் இரண்டு அமெரிக்க வீரர்கள் மற்றும் ஒரு சிவில் மொழிபெயர்ப்பாளர் கொல்லப்பட்டனர். இதனை அடுத்து ஜஸ் இலக்குகள் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
