Home உலகம் ஈரான் மீது தாக்குதல் : உலகில் இதுவரை பயன்படுத்தாத குண்டுகளை வீசிய அமெரிக்கா

ஈரான் மீது தாக்குதல் : உலகில் இதுவரை பயன்படுத்தாத குண்டுகளை வீசிய அமெரிக்கா

0

ஈரான் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா இன்று அதிகாலை தாக்குதல் நடத்தியுள்ள நிலையில் அந்த தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட குண்டுகள் உலகில் இதுவரை எங்குமே பயன்படுத்தப்படாதவை என தகவல் வெளியாகி உள்ளது. 

இதன்படி ஜி.பி.யூ-57 எனப்படும் பதுங்கு குழி அழிக்கும் குண்டுகளை (பங்கர் பஸ்டர்) வீசி தாக்குதல் நடத்தி உள்ளது.

அதிநவீன போர் விமானங்கள் மூலம் நடத்தப்பட்ட தாக்குதல்

 இந்த பங்கர் பஸ்டர் குண்டுகளை வீச, பி-2 என பெயரிடப்பட்ட அதிநவீன போர் விமானங்களை அமெரிக்கா பயன்படுத்தியுள்ளது.

ஒவ்வொரு பி-2 குண்டுவீச்சு விமானமும், தலா இரண்டு ஜி.பி.யூ-57 பங்கர் பஸ்டர் குண்டுகளை சுமந்து செல்லும் திறன் கொண்டது. இந்த குண்டுகள் ஒவ்வொன்றும் 30,000 பவுண்டுகள் (13.6 தொன்) எடை கொண்டவை.

மண்ணோடு மண்ணாகி விடும்

இந்த சக்திவாய்ந்த குண்டுகள் வெடிக்கும் இடம், முற்றிலும் மண்ணோடு மண்ணாகி விடும் என்று அமெரிக்க இராணுவத்தினர் கூறியுள்ளனர். எனினும், இந்த தாக்குதலில் ஏற்பட்ட சேதம் பற்றிய விவரங்களை ஈரான் அரசு முழுமையாக வெளியிடவில்லை.

பார்டோ அணு சக்தி மையத்தின் நுழைவாயில் மற்றும் பின்புற கதவுகள் மட்டுமே சேதம் அடைந்துள்ளதாக, அந்த நாட்டு இராணுவம் தெரிவித்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version