Home உலகம் தொடரும் போர் பதற்றம்: மத்தியகிழக்கிற்கு விரையும் அமெரிக்க துருப்புக்கள்

தொடரும் போர் பதற்றம்: மத்தியகிழக்கிற்கு விரையும் அமெரிக்க துருப்புக்கள்

0

காசா (Gaza) மற்றும் லெபனானில் (Lebanon) உள்ள மோதல்களைத் தீர்ப்பதில் முன்னேற்றம் காண இராணுவம் உள்ளிட்ட அமெரிக்காவின் (United States) உயர் பாதுகாப்பு அதிகாரிகள் குழு மத்திய கிழக்கு நோக்கிச் செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

லெபனான், காசா, ஈரான், பணயக்கைதிகள் மற்றும் பிற பிராந்திய விவகாரங்கள் பற்றி விவாதிக்க குறித்த குழுவின் விஜயம் அமையும் என கூறப்படுகிறது.

அமெரிக்க மத்தியஸ்தர்கள் 

இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் இடையிலான பகைமையை நிறுத்த அமெரிக்க மத்தியஸ்தர்கள் இராஜதந்திர ரீதியில் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.

மேலும், இந்த பேச்சுவார்த்தை தொடர்பில் ஆராய அமெரிக்க மத்திய புலனாய்வு அதிகாரியான பில் பர்ன்ஸ் (Bill Burns) எகிப்துக்கு செல்லவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த மாத ஆரம்பத்தில் இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டது.

இதன் விளைவாக இஸ்ரேலும் தனது பதிலடி தாக்குதலை மேற்கொண்டது.

இந்நிலையில் இருதரப்பு மோதல் வலுப்பெறுவதை தவிர்க்கவே சர்வதேச ரீதியிலான உயர்மட்ட பயணங்கள் மத்தியகிழக்கி நோக்கி நகர்வதாக கூறப்படுகிறது.

NO COMMENTS

Exit mobile version