Home உலகம் நெதன்யாகுவின் கைது: அமெரிக்காவின் அறிவிப்பால் திணறப்போகும் கனடா, பிரித்தானியா

நெதன்யாகுவின் கைது: அமெரிக்காவின் அறிவிப்பால் திணறப்போகும் கனடா, பிரித்தானியா

0

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) மீதான சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் பிடியாணை குறித்து பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி, கனடா ஆகிய நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறித்த எச்சரிக்கையை அமெரிக்க செனட்டரும் டொனால்ட் ட்ரம்பின் ஆதரவாளருமான லிண்ட்சி கிரஹாம் (Lindsey Graham) விடுத்துள்ளார்.

பொருளாதாரத் தடை

காசாவில் போர் குற்றங்களை நடத்தியதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கல்லன்ட் மீதும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

இந்த நிலையில், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிறப்பித்த பிடியாணையை செயற்படுத்தும் நாடுகளுக்கு பொருளாதாரத் தடையை சந்திக்க நேரிடும் என அமெரிக்க செனட்டர் எச்சரித்துள்ளார்.

கடுமையான எதிர்ப்பு

பிரதானமாக பிரித்தானியா, கனடா, ஜேர்மனி, மற்றும் பிரான்ஸை மேற்கோள்காட்டி இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

நீதிமன்றத்தின் அந்த உத்தரவிற்கு கடுமையான எதிர்ப்புக்களை அமெரிக்க பிரதிநிதிகள் தெரிவித்து வரும் நிலையில், இஸ்ரேலின் தலைவர்களை கைது செய்ய உதவும் நாடுகளின் பொருளாதாரம் நசுக்கப்படும் என லிண்ட்சி கிரஹாம் தெரிவித்துள்ளார்.  

NO COMMENTS

Exit mobile version