Home இலங்கை அரசியல் வாகன இறக்குமதிக்கு அனுமதி : நிதி இராஜாங்க அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு

வாகன இறக்குமதிக்கு அனுமதி : நிதி இராஜாங்க அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு

0

வாகன இறக்குமதி தொடர்பான செயற்பாடுகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தின் பின்னர் மேற்கொள்ளப்படும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய(Ranjith siyambalapitiya) தெரிவித்துள்ளார். 

மின்சார வாகனங்கள் 

வாகன இறக்குமதி தொடர்பில் ஆராயும் குழுவின் அறிக்கை ஆகஸ்ட் மாதம் இரண்டாவது வாரத்தில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. 

இதன்படி, இதன்படி, ஆகஸ்ட் மாதத்திலிருந்து வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு சில அனுமதிகளை பெற்றுக்கொள்ள முடியும் என இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய குறிப்பிட்டுள்ளார். 

மேலும், அதிகமாக  மின்சார வாகனங்களை கொண்டு வருவதில் கவனம் செலுத்தி வருகிறோம் என்றும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார். 

Source: https://tamilwin.com/article/vehicle-import-sri-lanka-1721297597

NO COMMENTS

Exit mobile version