Home உலகம் அமைதிக்கான நோபல் பரிசு எதிரொலி: நோர்வேயில் உள்ள தூதரகத்தை மூடியது வெனிசுலா

அமைதிக்கான நோபல் பரிசு எதிரொலி: நோர்வேயில் உள்ள தூதரகத்தை மூடியது வெனிசுலா

0

   அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோவுக்கு வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நோர்வேயில் உள்ள தூதரகத்தை வெனிசுலா அரசு மூடி உள்ளது.

நோர்வே அரசின் தன்னாட்சி அமைப்பான நோபல் கமிட்டி வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோவுக்கு நோபல் பரிசு வழங்கியதற்கு வெனிசுலா அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

காரணத்தை தெரிவிக்காமல் மூடப்பட்ட தூதரகம் 

 காரணத்தை தெரிவிக்காமல் கராகஸ் ஒஸ்லோவில் உள்ள தூதரகத்தை வெனிசுலா அரசு மூடிவிட்டதாக நோர்வேயின் வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்தியது. இந்த முடிவு வருந்தத்தக்கது.

 
பல விஷயங்களில் எங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும், வெனிசுலாவுடன் தொடர்ந்து உறவை விரும்புகிறோம் என்று நோர்வே வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

NO COMMENTS

Exit mobile version