Home சினிமா ரிலீஸுக்கு இன்னும் 10 நாட்கள் தான்.. ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டும் விடாமுயற்சி

ரிலீஸுக்கு இன்னும் 10 நாட்கள் தான்.. ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டும் விடாமுயற்சி

0

விடாமுயற்சி 

2023ஆம் ஆண்டு பொங்கல் எப்படி அஜித் ரசிகர்களுக்கு திருவிழாவாக துணிவு படம் அமைந்ததோ, அதே போல் 2025ஆம் ஆண்டு விடாமுயற்சி அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கியுள்ளார். இப்படத்தில் அஜித்துடன் இணைந்து பல ஆண்டுகளுக்கு பின் த்ரிஷா ஜோடியாக நடித்துள்ளார்.

10 நாட்களில் விடுதலை 2 படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

சமீபத்தில் சவடீகா எனும் பாடல் வெளிவந்து வைரலானது. இந்த பாடலில் அஜித் மற்றும் த்ரிஷா இருவரும் இணைந்து நடனமாடியுள்ளனர்.

ப்ரீ புக்கிங் வசூல் விவரம்

விடாமுயற்சி படத்தின் ரிலீஸுக்கு இன்னும் 10 நாட்களே இருக்கும் நிலையில், ப்ரீ புக்கிங் பட்டையை கிளப்பி வருகிறது என்று தான் சொல்லவேண்டும்.

ஆம், வெளிநாடுகளில் இப்படத்தின் ப்ரீ புக்கிங் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில், இதுவரை ரூ. 36 லட்சம் வசூல், ப்ரீ புக்கிங் மூலம் வந்துள்ளது. இதன்மூலம் முதல் நாள் வசூல் மாபெரும் சாதனை படைக்கும் என கூறுகின்றனர். 

NO COMMENTS

Exit mobile version