Home உலகம் சீனாவில் விசா தளர்வு : வெளிநாட்டவர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

சீனாவில் விசா தளர்வு : வெளிநாட்டவர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

0

 சீனாவில்(china) விசா இன்றி தங்கும் நடைமுறை உள்ள நிலையில் தற்போது மேலும் 2 விமான நிலையங்களில் அந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சீனாவில் 144 மணி நேரம் அதாவது 6 நாட்கள் வரை விசா இன்றி தங்கிக் கொள்ளலாம்.

அதன்படி ஏனைய நாடுகளுக்கு செல்லும் பயணிகள் இந்த கால அவகாசத்தை பயன்படுத்தி சீனாவை சுற்றி பார்க்க முடியும்.இதன்மூலம் சீனாவிற்கு வருமானமும் அதிகரிக்கும்.

சீனாவின் நடைமுறை

சீனாவின் இந்த நடைமுறை மூலம் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து உள்ளிட்ட 54 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் பயன்பெற்று வருகின்றனர்.

விஸ்தரிக்கப்பட்ட விசா தளர்வு

இந்தநிலையில் தற்போது ஹெனான் மாகாணம் செங்சூ சின்செங் விமான நிலையம், யுனான் மாகாணம் லிஜாங் விமான நிலையம் மற்றும் அங்குள்ள துறைமுகத்திலும் இந்த விசா தளர்வு நடைமுறை விரிவுபடுத்தப்பட்டு உள்ளது.

இதன்மூலம் விசா தளர்வு அளிக்கப்பட்டுள்ள விமான நிலையம் மற்றும் துறைமுகங்களின் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version