Home உலகம் இலங்கை உட்பட பல நாடுகளுக்கு இலவச விசா காலத்தை குறைக்கும் வெளிநாடு!

இலங்கை உட்பட பல நாடுகளுக்கு இலவச விசா காலத்தை குறைக்கும் வெளிநாடு!

0

தாய்லாந்தில் விசா இல்லாமல் தங்கும் காலம் இலங்கை உட்பட பல நாடுகளுக்கு 60 நாட்களில் இருந்து 30 நாட்களாகக் குறைக்கப்பட உள்ளதாக வெளிநாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தாய்லாந்தின் சுற்றுலா மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின்படி, விசா விலக்கு திட்டத்தை சட்டவிரோத வணிகங்கள் பயன்படுத்திக் கொள்ளும் அபாயத்தைக் கட்டுப்படுத்த இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அரசாங்க அனுமதி

எனினும், குறித்த திட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி அறிவிப்பதற்கு முன்னர் மேலதிகமாக கலந்துரையாடல் நடத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

2024 ஜூலை மாதம் முதல் 93 நாடுகளைச் சேர்ந்த கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் 60 நாட்கள் வரை சுற்றுலா நோக்கங்களுக்காக தாய்லாந்திற்குள் நுழைய அரசாங்கம் அனுமதி வழங்கியிருந்தது.

இருப்பினும், நீண்ட தூர சுற்றுலாப் பயணிகள் சராசரியாக 14-21 நாட்கள் மட்டுமே தங்கியிருப்பதுடன், குறுகிய தூர பயணிகள் ஒரு பயணத்திற்கு இரண்டு வாரங்களுக்கும் குறைவாகவோ அல்லது சராசரியாக ஏழு நாட்களுக்கோ செலவிடுவதால் தாய்லந்து சுற்றுலா இயக்குநர்கள் இது குறித்து கவரை வெளியிட்டுள்ளனர்.

சட்டவிரோதமாக வேலை

இதேவேளை, அந்நாட்டில் சட்டவிரோதமாக வேலை செய்யும் அல்லது வணிகம் செய்யும் வெளிநாட்டினரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், தாய் பயண முகவர்கள் சங்கம் முன்னதாக அமைச்சகத்திடம் இந்த கவலையை எழுப்பியது, அதே நேரத்தில் தாய் ஹோட்டல்கள் சங்கம், விருந்தினர்களுக்கு தினசரி சட்டவிரோதமாக வாடகைக்கு விடப்படும் இடங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு இது ஒரு காரணம் என குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறானதொரு பின்னணில், அந்நாட்டில் பல்வேறு பிரதேசங்களில் சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து ஒரு சிறப்பு கூட்டு செயல்பாட்டு மையம் விசாரணை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

NO COMMENTS

Exit mobile version