Home உலகம் பிரித்தானியா செல்லும் விமான பயணிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

பிரித்தானியா செல்லும் விமான பயணிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

0

பிரித்தானியாவில்(United kingdom) கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்காக விமானத்தில் பயணம் செய்யும் பயணிகள் தடை செய்யப்பட்ட பொருட்களைக் கொண்டுவருவதை தவிர்க்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இவ்வாறு தடை செய்யப்பட்ட பொருட்களை கொண்டு வருவதால் அநாவசியமாக விமான நிலையத்தில் தாமதத்தை சந்திக்க நேரிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், தடை செய்யப்பட்ட வெடிமருந்துள்ள பட்டாசுகள், எளிதில் எரியக்கூடிய அல்லது தீப்பற்றக்கூடிய பொருட்கள் மற்றும் பார்ட்டி பொப்பர்கள்(party poppers) போன்றவை தடை விதிக்கப்பட்டுள்ளன.

தடை செய்யப்பட்ட பொருட்கள் 

மேலும், விமானத்தில் செல்லும் போது, பொதிசெய்யப்பட்ட பரிசுப்பொருட்கள், பொம்மை துப்பாக்கிகள், நீர் கைத்துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்களைப் போல தோற்றமளிக்கும் பொம்மைகள் ஆகியவற்றை கொண்டு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, எதிர்வரும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுக்காக உலகளவில் மக்கள் தயாராகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version