Home இலங்கை அரசியல் தேசிய மக்கள் சக்தியினால் மாயாஜாலங்கள் செய்ய முடியாது: அநுரகுமார திஸாநாயக்க

தேசிய மக்கள் சக்தியினால் மாயாஜாலங்கள் செய்ய முடியாது: அநுரகுமார திஸாநாயக்க

0

தேசிய மக்கள் சக்தியினால் மாயாஜாலங்களையோ அதிசயங்களையோ செய்ய முடியாது என கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மொனராகல் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் இந்த விடயங்களை சுட்டிக்காட்டியுள்ளார். 

எனினும் இந்த நாட்டை செல்வந்த நாடாக மாற்றுவதற்கும் மக்களுக்கு உயர்ந்த வாழ்க்கைத் தரத்தை வழங்குவதற்கும் முயற்சிக்க முடியும் எனவும், இந்த திட்டங்கள் வகுக்கப்பட்டு விட்டதாகவும் இதனை செய்யக்கூடிய வலுவானவர்கள் கட்சியில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் என்ற ரீதியில் பங்களிப்பு

அரசாங்கம் என்ற ரீதியில் தமது பங்களிப்பினை வழங்க தேசிய மக்கள் சக்தி தயார் எனவும், மக்கள் தங்களது பங்களிப்பினை வழங்கி உதவி செய்ய வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

Source: https://tamilwin.com/article/we-cant-show-magic-peoples-support-needed-jvp-1726278786

NO COMMENTS

Exit mobile version