Home இலங்கை அரசியல் ராஜபக்சக்களை குற்றம் சாட்டுபவர்கள் ரணசிங்க பிரேமதாசவை மறந்து விட்டனர்

ராஜபக்சக்களை குற்றம் சாட்டுபவர்கள் ரணசிங்க பிரேமதாசவை மறந்து விட்டனர்

0

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸை தரைமட்டமாக்க ராஜபக்சக்கள் செய்ததை இன்று அனைவரும் நினைவுகூருகின்ற போதிலும், அந்த வேலையை ஆரம்பித்தவர் சஜித்தின் தந்தை ரணசிங்க பிரேமதாச என தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

யூடியூப் சேனலுடன் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

விமானங்கள் மூலம் பூக்கள் இறக்குமதி 

ராஜபக்சவின் குடும்ப ஊழலை மட்டுமே நாங்கள் நினைவில் வைத்துள்ளோம். ஆனால் தேசிய விமான சேவைக்குள் உறவினர்களை முதலில் அறிமுகப்படுத்தியது சஜித்தின் தந்தை பிரேமதாசதான்.

1990களின் முற்பகுதியில் ஶ்ரீலங்கன் பணிப்பாளர் சபைக்கு தனது மருமகனை நியமித்ததன் மூலம் அதை அவர் தொடங்கி வைத்தார். அவரது மருமகன் பூ வியாபாரம் செய்தார்.

அதனால் ஏர்லங்கா விமானங்கள் , அவருடைய பூ வியாபாரத்துக்கு அக்காலத்தில் பயன்படுத்தப்பட்டன.

1991ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதிக்கு எதிராக சுமத்தப்பட்ட பல இலஞ்ச குற்றச்சாட்டுக்களில் அவரது மருமகன் மற்றும் உறவினர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளும் காரணமாகும் என குறிப்பிட்டுள்ளார்.

விமானங்கள் மூலம் பூக்களை இறக்குமதி செய்ய சஜித்தின் தந்தை பிரேமதாசவின் மருமகன் ஶ்ரீலங்கன் பணிப்பாளர் சபைக்கு நியமிக்கப்பட்டதாகவும் நலிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.

You may like this,

NO COMMENTS

Exit mobile version