Home உலகம் பெண் என்பவர் யார்..! பிரிட்டன் உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

பெண் என்பவர் யார்..! பிரிட்டன் உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

0

பெண் என்பவர் யார் என்பதற்கு பிரிட்டன் (uk)உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை அளித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் தொடுக்கப்பட்ட வழக்கு குறித்து மேலும் தெரிய வருவதாவது,

பிரிட்டனின், ஸ்கொட்லாந்து(scotland) நாடாளுமன்றில், 2018ல் ஒரு சட்டம் இயற்றப்பட்டது. அதன்படி, ஸ்கொட்லாந்து பொது நிறுவனங்களில், பெண்களுக்கு 50 சதவீதம் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும். இந்த சட்டத்தில், திருநங்கையும் பெண்ணாகக் கருதப்படுவார் என்று கூறப்பட்டது. இதை எதிர்த்து வழக்குகள் தொடரப்பட்டன.

பிரிட்டன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

கடைசியாக, பிரிட்டன் உச்ச நீதிமன்றத்துக்கு இந்த வழக்கு வந்தது. இதை விசாரித்த ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவில்,

பிறக்கும்போது பெண்ணாக இருப்பவரின் பாலினம் பெண்ணாக கருதப்படும்

 
சமத்துவ சட்டத்தில், பாலினம் மற்றும் பெண் என்பதற்கான விளக்கம் தெளிவாக உள்ளது. அதன்படி, பிறக்கும்போது பெண்ணாக இருப்பவரின் பாலினம் பெண்ணாக கருதப்படும். திருநங்கையாக மாறுவோரை பெண்ணாகக் கருத முடியாது. இருப்பினும், ஏற்கனவே உள்ள மற்ற சட்டங்களின்படி, திருநங்கையரின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version