Home உலகம் கனடாவில் சூரிய கிரகணத்தை நேரடியாக பார்த்தவர்களுக்கு ஏற்பட்ட நிலை

கனடாவில் சூரிய கிரகணத்தை நேரடியாக பார்த்தவர்களுக்கு ஏற்பட்ட நிலை

0

கனடாவில் கடந்த எட்டாம் திகதி தென்பட்ட சூரிய கிரகணத்தை பாதுகாப்பற்ற முறையில் நேரடியாக பார்வையிட்ட 160ற்கும் மேற்பட்டவர்களுக்கு கண் உபாதைகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கனடாவின் கியூபெக் மற்றும் ஒன்றாரியோ ஆகிய மாகாணங்களில் இந்த பாதிப்புக்கள் பதிவாகியுள்ளன.

கண் பாதிப்புக்களை எதிர்நோக்கிய 160 சம்பவங்கள் 

சூரிய கிரகணம் காரணமாக கண் பாதிப்புக்களை எதிர்நோக்கிய 160 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

சிலருக்கு நிரந்தர பார்வைக் குறைபாடு ஏற்படக்கூடிய அளவிற்கு பாதிப்புக்கள் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டின் அநேக பகுதிகளில் சூரிய கிரகணம் தென்பட்ட போது மிகவும் பாதுகாப்பான வழிமுறைகளில் பலர் அதனை பார்வையிட்டனர்.

இதனால் ஆபத்துக்கள் குறைவாக பதிவாகியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கனடாவில் பாரியளவில் அதிகரிக்கும் நோய் தாக்கம்: ஆய்வில் வெளியான முக்கிய தகவல்

பாதுகாப்பற்ற வழிமுறைகளால் பார்வையிட்டதனால்

எனினும் சில இடங்களில் சூரிய கிரணத்தை சிலர் பாதுகாப்பற்ற வழிமுறைகளால் பார்வையிட்டதனால் கண் பாதிப்புக்கள் பதிவாகியுள்ளன.   

உலகின் அதி சக்தி வாய்ந்த இராணுவ பட்டியலில் ஏற்பட்டுள்ள மாற்றம்: முதலிடத்தில் எந்த நாடு தெரியுமா..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

NO COMMENTS

Exit mobile version