Home முக்கியச் செய்திகள் தமிழர் பிரதேசத்தில் கணவனை திருத்த முற்பட்ட மனைவிக்கு நேர்ந்த விபரீதம்

தமிழர் பிரதேசத்தில் கணவனை திருத்த முற்பட்ட மனைவிக்கு நேர்ந்த விபரீதம்

0

திருகோணமலையில் (Trincomalee), மதுபாவனைக்கு அடிமையாகி இருந்த கணவனை காப்பாற்றுவதற்காக முயற்சித்த மனைவி உடலில் தீப்பற்றி உயிரிழந்துள்ளார்.

பாலையூற்று, திருகோணமலையைச் சேர்ந்த பிரதீபன் நளினி (வயது 31) என்ற ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், “பெண்ணின் கணவர் தினமும் மதுவை பாவித்து வந்துள்ள நிலையில் அவரை
திருத்துவதற்காக குறித்த பெண் கடந்த 21 ஆம் திகதி தனது உடலில் மண்ணெண்ணெயை
ஊற்றிவிட்டு தீப்பெட்டியில் இருந்து தீ மூட்டி மிரட்டியுள்ளார்.

மேலதிக சிகிச்சை

இதன்போது, திடீரென அவர் மீது தீப்பற்றியதுடன் அவரை காப்பாற்ற முயன்ற கணவனின் கை மீதும் தீப்பற்றியுள்ளது.

இதையடுத்து, இருவரும் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கடந்த 27ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளை சிகிச்சை பலனின்றி அவர் நேற்றையதினம் (29)
உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம்
பிறேம்குமார் மேற்கொண்டுள்ளார்.

மேலும், உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம்
உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதுடன் கணவன் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று
வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version