Home உலகம் கனடாவில் சூட்கேஸிலிருந்து மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்

கனடாவில் சூட்கேஸிலிருந்து மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்

0

கனடாவின் நியூபவுண்ட்லான்ட்டில் சூட்கேஸ் ஒன்றில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நியூபவுண்ட்லான்டின் சென் ஜோன்ஸ் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ள நிலையில் இந்த பெண்ணின் சடலம் மீட்கப்படுவதற்கு முதல் நாள் குறித்த பெண்ணின் கணவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில், குறித்த நபர் இந்தப் பெண்ணை கொலை செய்து விட்டு அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்ணின் சடலம் 

இதனடிப்படையில், 33 வயதான ஈரானிய பெண் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன் இந்தப் பெண்ணின் கணவர் 34 வயதான ஈரானிய பிரஜை எனவும் அவரது சடலம் அவர்களது வீட்டில் மீட்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இது கொலையா அல்லது தற்கொலையா போன்ற எந்தவொரு விபரங்களையும் காவல்துறையினர் இதுவரையில் வெளியிடவில்லையெனவும் இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version