Home உலகம் கோழி இறைச்சி உணவிற்கு காத்திருந்த மூதாட்டிக்கு அடித்த அதிஷ்டம்

கோழி இறைச்சி உணவிற்கு காத்திருந்த மூதாட்டிக்கு அடித்த அதிஷ்டம்

0

அமெரிக்காவில் மேரிலாண்ட் மாகாணத்தின் தலைநகரான அனாபொலிஸ் பகுதியை சேர்ந்த மூதாட்டி ஒருவர் உணவகத்திற்கு சென்று கோழி இறைச்சி உணவு ஓடர் கொடுத்து விட்டு காத்திருந்தார்.

அந்த நேரத்தில் அவர் 10 டொலர் மதிப்புள்ள கசினோ றோயல் ஸ்லாட்ஸ் லொட்டரி டிக்கெட்டுகளை வாங்கினார். அந்த லொட்டரிக்கு ஜாக்பாட் பரிசாக 2 லட்சத்து 29 ஆயிரத்து 680 டொலர்கள் பரிசு விழுந்துள்ளது.

 எனக்கு ஜாக்பாட் அடித்துள்ளது 

இதையறிந்த அந்த மூதாட்டி தனது மகளிடம் லொட்டரி சீட்டை காட்டி எனக்கு ஜாக்பாட் அடித்துள்ளது என நினைக்கிறேன் என்று கூறி உள்ளார்.

அவரது மகளும் உடனே லொட்டரியை வாங்கி பரிசு விழுந்த எண்ணை சரி பார்த்த போது அவருக்கு ஜாக்பாட் பரிசு விழுந்திருப்பது உண்மை என்பது தெரிய வந்தது.

தமிழர்களின் தியாகத்தைப் போற்ற தாய்லாந்தில் அமைக்கப்பட்டது நடுகல்!

தனிப்பட்ட காரணங்களுக்காக

தனிப்பட்ட காரணங்களுக்காக தனது பெயரை நம்பிக்கையுள்ள பாட்டி என்று அடையாளப்படுத்திக் கொண்ட அந்த மூதாட்டி, பரிசுத்தொகையை என்ன செய்யலாம் என்று இன்னும் யோசிக்கவில்லை.

கண்டல் தாவரங்கள் தொடர்பில் ஆராய மண்டைதீவிற்கு சென்ற எரிக் சொல்ஹெய்ம்

நான் இன்னும் இன்ப அதிர்ச்சியில் இருக்கிறேன். நான் வாழ்க்கையை அனுபவிக்க போகிறேன். பரிசுத் தொகையில் பேரக்குழந்தைகளுக்கு உதவி செய்வேன் என்றார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

NO COMMENTS

Exit mobile version