Home இலங்கை உலக வங்கியின் இலங்கைக்கான மேலாளராக புதியவர் நியமனம்

உலக வங்கியின் இலங்கைக்கான மேலாளராக புதியவர் நியமனம்

0

Courtesy: Sivaa Mayuri

உலக வங்கியின், இலங்கைக்கான மேலாளராக கெவோக் சர்க்ஸியன்( Gevorg Sargsyan) அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஆர்மேனிய நாட்டவரான சர்க்ஸியன், 2000 ஆம் ஆண்டில் உலக வங்கியுடன் இணைந்து கொண்டு பல்வேறு பதவிகளில் பணியாற்றியுள்ளார்.

பொருளாதார மீட்சி

குறிப்பாக ஐரோப்பா, மத்திய ஆசியா மற்றும் கிழக்கு ஆசியாவில் மேலாளர் மற்றும் செயல்பாட்டு மேலாளராகவும் அவர் பணிபுரிந்ததோடு, அண்மைக்காலத்தில் உக்ரைனிலும் உலக வங்கியின் மேலாளராக பணிபுரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தநிலையில், இலங்கையின் பொது மற்றும் தனியார் துறை முன்னுரிமைகளுக்கு சிறந்த ஆதரவை வழங்குவதற்காக, தமது நிறுவனம், நாடளாவிய தலைமைத்துவத்தை ஒருங்கிணைக்கும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.

அத்துடன் பொருளாதார மீட்சி, அதிகரித்த வறுமை மற்றும் காலநிலை மாற்றத்தின் தாக்கங்கள் உட்பட்ட சவால்களின் மத்தியில் இலங்கை வழிநடத்தப்படுகிறது என்றும் உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

இதற்கு மத்தியில் இவை அனைத்திற்கும் அதன் பொருளாதாரம் மற்றும் மக்களைப் பாதுகாக்க கணிசமான சீர்திருத்தங்கள் தேவைப்படுகின்றன என்று உலக வங்கி குழுவின் இலங்கைக்கான புதிய மேலாளர் கெவோக் சர்க்ஸியன் (Gevorg Sargsyan) கூறியுள்ளார்.   

NO COMMENTS

Exit mobile version