Home உலகம் போதைபொருள் பாவணையால் இலட்சக்கணக்கில் உயிரிழக்கும் மக்கள் : உலக சுகாதார நிறுவனம் தகவல்

போதைபொருள் பாவணையால் இலட்சக்கணக்கில் உயிரிழக்கும் மக்கள் : உலக சுகாதார நிறுவனம் தகவல்

0

உலகம் முழுவதும் மது மற்றும் போதைப் பொருட்களால் ஒவ்வொரு வருடமும் 32 லட்சம் மக்கள் உயிரிழப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில், மது அருந்துவதால் மட்டும் உலக முழுவதும் ஒவ்வொரு வருடமும் 26 லட்சம் மக்கள் உயிரிழப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்தோடு, போதைப் பொருட்களால் உலகம் முழுவதும் ஒவ்வொரு வருடமும் ஆறு லட்சம் மக்கள் உயிரிழப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறைந்த வருமானம்

இந்தநிலையில், மது மற்றும் போதைப் பொருட்களால் மரணிப்பவர்களில் பெரும்பாலானோர் ஆண்களெனவும் அவர்களில் மது அருந்துவதால் 20 லட்சம் ஆண்களும் மற்றும் கஞ்சாவினால் நான்கு லட்சம் ஆண்களும் ஒவ்வொரு வருடமும் உயிரிழப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் குறைந்த வருமானம் பெறும் நாடுகளில் அதிகமானோர் மதுவினால் உயிரிழப்பதுடன் மக்கள் அதிக வருமானம் பெறும் நாடுகளில் குறைவான அளவிலேயே மதுவினால் ஏற்படும் உயிரிழப்புகள் உள்ளதாகவும் சுட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த விடயத்தை 2019 ஆம் ஆண்டு எடுத்த தரவுகளின் அடிப்படையில் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version