Home உலகம் உலகின் மிகப்பெரிய மரகதக்கல்: சபிக்கப்பட்ட கல் என அழைக்கப்படுவதற்கான காரணம் இதுதான்!

உலகின் மிகப்பெரிய மரகதக்கல்: சபிக்கப்பட்ட கல் என அழைக்கப்படுவதற்கான காரணம் இதுதான்!

0

பிரேசில் (Brazil) நாட்டிலுள்ள உலகின் மிகப்பெரிய மரகதக்கல் என அழைக்கப்பட்ட கல் சபிக்கப்பட்ட கல் எனவும் அழைக்கப்படுகிறது.

இது பிரேசில் நாட்டிலுள்ள Bahia என்னுமிடத்திலுள்ள சுரங்கம் ஒன்றில் வெட்டியெடுக்கப்பட்ட ஒரு கல்லாகும்.

இதனிடையே மிகப்பெரிய மரகதக்கல் என அழைக்கப்படும் ஒரு கல்லுக்காக இரண்டு நாடுகள் உரிமை கொண்டாடிக்கொண்டாடி வருகின்றது.

பிரேசிலில் வெட்டியெடுக்கப்பட்ட அந்த கல், ஜெனரல் என்ற பட்டப்பெயரில் அழைக்கப்பட்ட ஒருவரைச் சென்றடைய, அவர் அதை 8,000 டொலர்களுக்கு விற்பனை செய்துள்ளார்.

ஆனால், அதன் இன்றைய மதிப்பு ஒரு பில்லியன் டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

சபிக்கப்பட்ட மரகதக்கல் 

இந்தக்கல் பயணிக்கும் வழியெல்லாம் பேரழிவுகளையும் பண நஷ்டத்தையும் உருவாக்கியதால் அது சபிக்கப்பட்ட மரகதக்கல் என அழைக்கப்படுகின்றது.

பல இடங்கள் சுற்றி அமெரிக்காவுக்குள் (United States) நுழைந்த அந்த மரகதக்கல்லை Ferrara என்பவரும் Kit Morrison என்பவரும் New Orleans என்னுமிடத்தில் பத்திரப்படுத்திவைக்க, அந்நேரத்தில் கத்ரினா புயல் ஏற்பட்டது.

பின்னர் அது காணாமல் போனதாக கூறப்பட, கலிபோர்னியாவில் மர்மமான முறையில் மீண்டும் அந்த கல் தென்பட்டது.

மதிப்பு

தற்போது இறுதியாக, லாஸ் ஏஞ்சல்சிலுள்ள (Los Angeles) ஷெரீஃப் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரேசில் நாடு அந்த மரகதக்கல் தங்கள் தேசிய சொத்து என்று கூறி, அதை அமெரிக்கா தங்களிடம் ஒப்படைக்க, சட்டப்படி நடவடிக்கைகளைத் ஆரம்பித்துள்ளது.

அது தொடர்பில், விரைவில் அமெரிக்க நீதிமன்றம் ஒன்று முடிவெடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version