Home உலகம் வெளிநாடொன்றில் கண்டுபிடிக்கப்பட்ட பிரமாண்ட மரகத கல்

வெளிநாடொன்றில் கண்டுபிடிக்கப்பட்ட பிரமாண்ட மரகத கல்

0

மடகாஸ்கரில் 300 கிலோ எடையுள்ள பிரமாண்ட எமரால்டு எனப்படும் பச்சை நிற மரகத கல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த கல் ஜனாதிபதி மாளிகையில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விடயத்தை புதிய இராணுவ ஆட்சியின் ஜனாதிபதி மைக்கேல் ராண்ட்ரியரினா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மாளிகை

இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், “ஜனாதிபதி மாளிகைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 300 கிலோ எடையுள்ள மரகத கல், தேசிய பொக்கிஷத்தில் இருந்ததை கண்டுபிடித்துள்ளோம்.

அரசு கருவூலம் கிட்டத்தட்ட காலியாகியுள்ள நிலையில், சர்வதேச நிதியுதவியைப் பெறவும் சர்வதேச அங்கீகாரத்தைப் பெறவும் புதிய நிர்வாகம் செயல்பட்டு வருகின்றது.

அரசு கருவூலத்தை நிரப்ப, ஜனாதிபதி மாளிகையில் கைப்பற்றப்பட்ட மரகத கல் ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது ஏன் இங்கு மறைத்து வைக்கப்பட்டுள்ளது என எங்களுக்கு தெரியவில்லை” என அவர் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version