Home உலகம் விலை உயர்ந்த நத்தார் மரம் உள்ள நாடு எது தெரியுமா….!

விலை உயர்ந்த நத்தார் மரம் உள்ள நாடு எது தெரியுமா….!

0

உலகிலேயே மிக விலை உயர்ந்த நத்தார் மரத்தினை ஜேர்மனி(Germany) அறிமுகப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்துடன், குறித்த நத்தார் மரத்தின் பெறுமதி சுமார் 04 மில்லியன் ஜேர்மன் பவுண்டுகள் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நத்தார் மரம் 10 அடி உயரமானது என்பதுடன்  2,024 திட தங்க நாணயங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.

விலை உயர் நத்தார் மரம்

இதனைப் பொன் நாணய வியாபாரியான Pro Aurum உருவாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 60 கிலோவுக்கும் அதிகமான எடையைக் கொண்ட இந்த வடிவமைப்பின் மேல் பகுதியிலுள்ள நாணயம் 24 கரட் தங்க நாணயம் என குறிப்பிடப்படுகின்றது.

மேலும், நத்தார் மரத்தினை விற்பனை செய்யும் எண்ணம் தனக்கு இல்லை என வடிவமைப்பாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version