உலக பணக்காரர்கள் பட்டியலில் எக்ஸ் தள உரிமையாளரும் இஸ்பேஸ் எக்ஸ்(SpaceX) பங்குதாரருமான எலோன் மஸ்க் (elon musk)புதிய உச்சத்தை தொட்டுள்ளார்.
இதன்படி எலோன் மஸ்க் 400 பில்லியன்டொலர் நிகர மதிப்பை எட்டிய முதல் நபர் ஆனார், இது உலகின் பணக்காரர் பட்டியலில் தனிநபரின் சமீபத்திய மைல்கல் ஆகும்.
ப்ளூம்பெர்க் பில்லியனர்ஸ் இன்டெக்ஸ் தகவலினன் படி, மஸ்க்கின் நிகர மதிப்பு சுமார் $50 பில்லியனாக உயர்ந்து ஒரேயடியாக $439.2 பில்லியனாக அதிகரித்துள்ளது.
ட்ரம்பின் வெற்றிக்கு பின்னர் அதிகரித்த சொத்து மதிப்பு
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ட்ரம்பின்(trump) வெற்றிக்கு பின்னர் மஸ்க்கின் சொத்து மதிப்பு 66 வீதமாக அதிகரித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ட்ரம்ப் வெற்றிபெற எலோன் மஸ்க் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டதுடன் வெற்றியின் முக்கிய நபர்களில் ஒருவராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.