Home உலகம் மூன்றாம் உலகப்போர் வெடித்தால் : பிரித்தானியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

மூன்றாம் உலகப்போர் வெடித்தால் : பிரித்தானியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

0

பிரித்தானிய (United Kingdom) பொதுமக்கள் இராணுவத்தில் சேர வேண்டியிருக்குமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ரஷ்யா (Russia) மற்றும் உக்ரைன் (Ukraine) போர், மூன்றாம் உலகப்போராக வெடிக்கும் பட்சத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் போரிட்டவரும், லிபரல் டெமாக்ரட்ஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான மைக் மார்ட்டின் (Mike Martin) என்பவர் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய பொதுமக்கள்

உக்ரைன் போர் தற்போதைக்கு முடிவுக்கு வருவது போல் தெரியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், பிரித்தானியாவும் ரஷ்யாவுடனான போரில் தலையிட வேண்டிவருமானால் பிரித்தானிய பொதுமக்கள் இராணுவத்தில் சேரவேண்டியிருக்கும், வேறு வழியில்லை என மைக் மார்ட்டின் தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய இராணுவத்தில் கடற்படை மற்றும் விமானப்படை உட்பட மொத்தம் 138,000 பேர்தான் உள்ள நிலையில் அதில், 75,000 பேர் மட்டுமே தரைப்படையில் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version