Home உலகம் இஸ்ரேலின் ஏவுகணை தாக்குதலில் ஈரானிய இளம் பெண் கவிஞர் குடும்பத்துடன் பலி

இஸ்ரேலின் ஏவுகணை தாக்குதலில் ஈரானிய இளம் பெண் கவிஞர் குடும்பத்துடன் பலி

0

இஸ்ரேலிய(israel) ஏவுகணைத் தாக்குதல்களில் கொல்லப்பட்ட ஈரானியர்களில் பிரபல ஈரானிய கவிஞர் பர்னியா அப்பாசியும்(Parnia Abbasi) ஒருவர் என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

23 வயதான கவிஞரும் ஆங்கில பட்டதாரியுமான பர்னியா அப்பாசி, கடந்த வெள்ளிக்கிழமை தலைநகர் தெஹ்ரானில் அவர் வசித்து வந்த அடுக்குமாடி கட்டிடத்தின் மீது இஸ்ரேலிய ஏவுகணை தாக்கியதில் கொல்லப்பட்டார்.

குடும்பத்துடன் பலி

பர்னியா தனது தந்தை, அவரது தாயார் மற்றும் அவரது 16 வயது சகோதரர் பர்ஹாம் ஆகியோருடன் கொல்லப்பட்டார்.

ஈரானில் உள்ள எந்த இராணுவ நிறுவனத்துடனும் எந்த தொடர்பும் இல்லாத கவிஞரான பர்னியா, காஸ்வின் சர்வதேச பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர், அங்கு அவர் ஆங்கில மொழிபெயர்ப்பைப் பயின்றார்.

NO COMMENTS

Exit mobile version