Home முக்கியச் செய்திகள் வரலாற்று சாதனை படைத்துள்ள இந்திய வீரர்

வரலாற்று சாதனை படைத்துள்ள இந்திய வீரர்

0

சிம்பாப்வே – இந்திய அணிகளுக்கிடையேயான இன்றைய போட்டியில், முதல் ஓவரில் வீசப்பட்ட முதல் 2 பந்துகளில் சிக்ஸர் விளாசி யஷஸ்வி ஜெய்ஷ்வால் புதிய சாதனையொன்றை படைத்துள்ளார்.

சிம்பாப்வே – இந்திய அணிகளுக்கு இடையே 5 ஆவது ரி 20 போட்டி இன்று(14) நடைபெற்றது.

இப்போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 167 ஓட்டங்கள் எடுத்தது.

இந்திய அணி

இதனைதொடர்ந்து 168 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய சிம்பாப்வே அணி 18.3 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 125 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து தோல்வியடைந்தது.

இந்தKWPDVOKWPDVO போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ரி20 தொடரில் 4 – 1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது.

இந்த  இப்போட்டியின் முதல் ஓவரில் வீசப்பட்ட முதல் 2 பந்துகளில் சிக்ஸர் விளாசி யஷஸ்வி ஜெய்ஷ்வால் புதிய சாதனை படைத்துள்ளார்.

முதல் ஓவரை சிம்பாப்வே அணியின் வீரர் சிக்கந்தர் ராசா வீச முதல் பந்தில் ஜெய்ஷ்வால் சிக்ஸர் அடித்தார்.

உலக சாதனை 

அதனை தொடர்ந்து அந்த பந்து (நோ பால் ) என அறிவிக்கப்பட்டது, எனவே பிரீ ஹிட்டாக வந்த அடுத்த பந்திலும்,ஜெய்ஷ்வால் சிக்ஸர் அடித்தார்.

இதன் மூலம் ஒரே பந்தில் 13 ஓட்டங்கள் பெறப்பட்டது.

இதன்மூலம் ரி20 போட்டியில் முதல் பந்திலேயே 13 ஓட்டங்கள் குவித்த முதல் அணி என்ற சாதனையை இந்திய அணி படைத்தது.

மேலும், ரி20 போட்டியில் முதல் ஓவரின் முதல் 2 பந்துகளில் சிக்ஸர் விளாசிய 2 ஆவது வீரர் என்ற சாதனையையும் ஜெய்ஷ்வால் படைத்துள்ளார்.

இதற்கு முன்பு தான்சானியாவை சேர்ந்த இவான் இஸ்மாயில் செலிமானி என்ற வீரர் ருவாண்டா அணிக்கு எதிரான போட்டியில் முதல் ஓவரின் முதல் 2 பந்துகளில் சிக்ஸர் விளாசி சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version