முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

திருகோணமலை வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு மோட்டார் சைக்கிள்கள் வழங்கி வைப்பு!

திருகோணமலை மாவட்ட வனவிலங்கு பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளின் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், அரசாங்கத்தினால் மோட்டார் சைக்கிள்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (25) மாலை திருகோணமலை வனவிலங்கு பாதுகாப்பு திணைக்கள வளாகத்தில் நடைபெற்றது.

இயற்கை சூழலையும் வனவிலங்கு வளங்களையும் பாதுகாக்கும் சவாலான பணியில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு வரும் அதிகாரிகளின் களப்பணிகளை மேலும் திறம்பட முன்னெடுப்பதற்காக, முதற்கட்டமாக 13 அதிகாரிகளுக்கு இந்நாளில் புதிய மோட்டார் சைக்கிள்கள் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் வனஜீவராசிகள் மற்றும் சுற்றுச்சூழல் பிரதி அமைச்சர் அன்டன் ஜயகொடி பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு மோட்டார் சைக்கிள்களை அதிகாரிகளிடம் வழங்கி வைத்தார்.

நிகழ்வில் உரையாற்றிய வனவிலங்கு அதிகாரிகள், “இன்றைய நாள் நமது திணைக்களத்திற்கும் வனவிலங்கு பாதுகாப்புத் துறைக்கும் மிகவும் விசேடமானதும் மகிழ்ச்சிகரமானதுமான ஒரு நாளாகும். இந்த போக்குவரத்து வசதி நமது அன்றாட கண்காணிப்பு நடவடிக்கைகளை மேலும் விரைவுபடுத்த உதவும்” எனத் தெரிவித்தனர்.

இச்சிறப்பு நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன, திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் W. H. M. ஹேமந்தகுமார, சுற்றுச்சூழல் அமைச்சின் வனஜீவராசிகள் பிரிவின் மேலதிக செயலாளர் (அபிவிருத்தி) D.C.P. உதய குமார, வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் (செயற்பாடுகள்) U.L. தௌஃபீக் மற்றும் திருகோணமலை மாவட்ட வனஜீவராசிகள் திணைக்கள ஊழியர்கள், உயரதிகாரிகள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

Source: https://samugammedia.com/motorcycles-handed-over-to-trincomalee-wildlife-conservation-officers-1787730566

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.