Home உலகம் ஈரான் மீது இஸ்ரேலின் அடுத்த அடி : கசிந்த அமெரிக்க ஆவணங்கள்

ஈரான் மீது இஸ்ரேலின் அடுத்த அடி : கசிந்த அமெரிக்க ஆவணங்கள்

0

ஈரான் (Iran) மீது தாக்குதல் நடத்துவது தொடர்பாக இஸ்ரேலின் முயற்சிகள் குறித்த அமெரிக்க (America) உளவுத்துறையில் இரண்டு இரகசிய ஆவணங்கள் கசிந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பலஸ்தீனம் (Palestine) மீது கடந்த ஒரு வருடமாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில் 42 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்தநிலையில், அண்டை நாடான லெபனான் (Lebanon) மீதும் இஸ்ரேல் (Israel) தாக்குதல் நடத்தத் தொடங்கியுள்ளது.

ஹிஸ்புல்லா தலைவர் 

ஹமாஸுக்கு (Hamas) ஆதரவாக லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா (Hezbollah) தலைவர் ஹசன் நஸ்ரல்லா (Hassan Nasrallah) தலைநகர் பெய்ரூட்டில் (Beirut) வைத்து கொல்லப்பட்டார்.

இதைத்தொடர்ந்து, இஸ்ரேல் மீது 180 ஏவுகணைகளை சரமாரியாக ஏவி ஈரான் திடீர் தாக்குதல் நடத்திய நிலையில் இதனால் ஈரான் அணு உலைகள் மற்றும் எண்ணெய் கிணறுகள் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் துடித்து வருகின்றது.

சைபர் தாக்குதல் 

இருப்பினும், ஈரான் அணு உலைகள் மீது தாக்குதல் நடத்தப்படாது என்று அமெரிக்கா உறுதி அளித்துள்ள நிலையில் இதற்கிடையே ஈரான் மீது சைபர் தாக்குதல் ஒன்றையும் இஸ்ரேல் நடத்தியது.

இதில் தங்கள் அரசின் ரகசிய ஆவணகள் திருடப்பட்டகாக ஈரான் குற்றம்சாட்டிய நிலையில் ஈரான் மீது தாக்குதல் நடத்துவது தொடர்பாக இஸ்ரேலின் முயற்சிகள் குறித்த அமெரிக்க உளவுத்துறையில் இரண்டு ரகசிய ஆவணங்கள் கசிந்துள்ளன.

அமெரிக்காவின் நேஷனல் ஜியோஸ்பாஷியல் இன்டலிஜென்ஸ் ஏஜென்சியில் இருந்த இந்த ஆவணங்களானது டெலிகிராமில் கசிந்துள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஈரான் மீது தாக்குதல்

இந்த ஆவணங்களில் ஈரான் தாக்குதலுக்கு இஸ்ரேலிய படைகள் பிரத்யேக பயிற்சி எடுத்துவரும் மற்றும் தாக்குதளுக்கு ஒத்திகை பார்க்கும் சாட்டிலைட் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

முதல் ஆவணத்தில் இஸ்ரேல் விமானப் படை ஈரான் மீது மிகப்பெரிய தாக்குதலை நடத்த எப்படியெல்லாம் தயாராகி வருகிறது என்ற விவரங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், மற்றொரு வானத்தில் ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் தங்கள் ஏவுகணைகள் மற்றும் ஆயுதங்களை தயார்ப்படுத்தி வருவது குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version