Home உலகம் நள்ளிரவில் அமெரிக்காவை உலுக்கிய கோர விபத்து: பலர் படுகாயம்

நள்ளிரவில் அமெரிக்காவை உலுக்கிய கோர விபத்து: பலர் படுகாயம்

0

அமெரிக்காவில் மக்கள் கூட்டத்திற்குள் வாகனம் மோதி பாரிய விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் சாண்டா மொனிகா புயூவெர்ட் பகுதியில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், பகுதியில் இரவுநேர கேளிக்கை விடுதியொன்று உள்ளது.

ஆபத்தான நிலை

இங்கு உள்ளுர் நேரப்படி அதிகாலையில் நுழைய வரிசையில் காத்திருந்த கூட்டத்தின் மீது அந்த சாலையில் வந்த கார் ஒன்று மோதியுள்ளது.

கூட்டத்தில் பெரும்பாலோர் பெண்கள் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், காயமடைந்தவர்கள் ஆரம்ப சிகிச்சைக்காக உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

அத்தோடு, மூன்று பேர் ஆபத்தான நிலையில் உள்ளதுடன் ஓட்டுநர் சுயநினைவை இழந்து காரை மோதியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்தில் இன்னும் யாரும் கைது செய்யப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

NO COMMENTS

Exit mobile version