ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(ranil wickremesinghe) உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் ஐந்து இராஜாங்க அமைச்சர்களை பதவி நீக்கியுள்ளார்.
இதற்கமைய, இராஜாங்க அமைச்சர்களான கீதா குமாரசிங்க(Geetha Kumarasinghe), சஷீந்திர ராஜபக்ச(Shasheendra Rajapaksa), அமித் தேனுக விதானகமகே(Thenuka Vidanagamage), பிரசன்ன ரணவீர(Prasanna Ranaweera) மற்றும் டி.வி. சானக(D.V. Chanaka) ஆகியோர் குறித்த இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டவர்களாவர்
உடன் பதவி நீக்கம்
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 47(3) (அ) பிரிவின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இவர்கள் பதவி நீக்கப்பட்டுள்ளனர்.
கடந்த நான்கு நாட்களுக்கு முன்னரும் நான்கு இராஜாங்க அமைச்சர்களை ரணில் பதவி நீக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.