Home உலகம் வெளிநாடொன்றில் கடலில் கவிழ்ந்த சொகுசு கப்பல்: இலங்கையர் உட்பட அறுவர் மாயம்

வெளிநாடொன்றில் கடலில் கவிழ்ந்த சொகுசு கப்பல்: இலங்கையர் உட்பட அறுவர் மாயம்

0

இத்தாலியில் (Italy), சிசிலி தீவுகளுக்கு அருகே சொகுசு கப்பல் ஒன்று கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 6 பேரை காணவில்லை.

பிரித்தானியக் (Britain) கொடியுடன் பயணித்த 56 மீற்றர் நீளமான கப்பலில் 22 பயணிகள் மற்றும் பணியாளர்கள் இருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அப்பகுதியில் நிலவும் மோசமான வானிலை காரணமாக ஏற்பட்ட சூறாவளியே இந்த விபத்திற்கு காரணம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மீட்பு பணிகள்

கப்பலில் பயணித்தவர்களில் இலங்கையர் ஒருவரும் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், பிரித்தானிய, அமெரிக்க (US) மற்றும் கனேடிய (Canada) பிரஜைகள் அடங்கிய குழுவொன்று சொகுசு படகில் பயணித்துள்ளதுடன், விபத்தில் உயிரிழந்த நபரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

காணாமல் போன 06 பேரை தேடும் பணியை கடலோர காவல்படை அதிகாரிகள் ஆரம்பித்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version