Home உலகம் காசா போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான இறுதி வாய்ப்பு: ஆண்டனி பிளிங்கன்

காசா போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான இறுதி வாய்ப்பு: ஆண்டனி பிளிங்கன்

0

இஸ்ரேலுக்கும் (Israel)  ஹமாசுக்கும் இடையே நடந்து வரும் காசா போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான கடைசி வாய்ப்பாக இருக்கலாம் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் (Antony Blinken) தெரிவித்துள்ளார்.

காசா போர்நிறுத்தம் மற்றும் கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தை எட்டுவதற்கான முயற்சிகளை முன்னெடுப்பதற்காக ஆண்டனி பிளிங்கன் நேற்று (18) இஸ்ரேலை வந்தடந்தார்.

இதன் போது, இஸ்ரேலிய அதிபர் ஐசக் ஹெர்சோக் ( Isaac Herzog) உடன் நடந்த சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

முக்கியமான தருணம்

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், ”இது ஒரு முக்கியமான தருணம், கைதிகளை வீடு திரும்பச் செய்யவும், சமானத்த ஏற்படுத்தவும், நீடித்த அமைதி மற்றும் பாதுகாப்பை நிலைநிறுத்துவதற்கான சிறந்த பாதையில் அனைவரையும் அழைத்துச் செல்வதற்கான” சிறந்த மற்றும் கடைசி வாய்பாக இது இருக்கலாம் என தெரிவித்துள்ளார்.

அதன்படி, பேச்சுவார்த்தைகளின் போது இஸ்ரேலின் நிலைப்பாட்டை வலுப்படுத்த காசாவில் அதன் நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவை சமீபத்தில் இராணுவத்திற்கு அறிவுறுத்தியுள்ளதாக இஸ்ரேலிய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், காசா பகுதியியல், பாலஸ்தீனியர்களுக்கு எதிரான, அடக்குமுறை, சர்வாதிகார மற்றும் வன்முறைக் கொள்கைகளை இஸ்ரேல் தொடர்வதாக ஹமாஸ் குற்றம் சாட்டியுள்ளதுடன், தங்களைத் தற்காத்துக் கொள்ள முடியாத பொதுமக்களுக்கு எதிராக இஸ்ரேல் வேண்டுமென்றே வன்முறைச் செயல்களை தொடர்வதாகவும் வன்மையாக கண்டித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version