சில மணிநேரங்களுக்கு முன்னர் புறப்பட்ட இஸ்ரேலின் 60 போர் விமானங்கள் ஈரானின் மையப் பகுதியில் உள்ள பாலிஸ்டிக் ஏவுகணைகளை குறிவைத்து, மிகப்பெரிய தாக்குதல்களை மேற்கொண்டுள்ளன.
இந்த தகவலை இஸ்ரேலின் பாதுகாப்புப் படைகளின் (IDF) பேச்சாளர் பிரிகேடியர் ஜெனரல் எஃபி டெஃப்ரின் உறுதிப்படுத்தியுள்ளார்.
தாக்குதலில் அழிக்கப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைகள் இஸ்ரேலை நோக்கி தாக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்ததாக அவர் கூறியுள்ளார்.
பின்வாங்கும் ஈரானிய படைகள்
இதன்போது, அவர் மேலும் தெரிவித்ததாவது, “கடந்த நாட்களில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களின் விளைவாக, ஈரானிய படைகள் மேற்குப் பகுதியிலிருந்து ஈரானின் மையப்பகுதிக்கு பின்வாங்கியுள்ளன.
Update: https://t.co/cuotXrY4Db pic.twitter.com/QVyK7vBFqB
— Israel Defense Forces (@IDF) June 17, 2025
இப்போது அவர்கள் இஸ்பாஹானில் இருந்து ஏவுகணைகள் ஏவ முயற்சிக்கின்றனர். ஆனால், அவர்கள் எங்கு சென்றாலும் நாங்கள் அவர்களைத் தொடர்ந்து தாக்குவோம்,”என்றார்.
12 இடங்களில் துல்லிய தாக்குதல்
மேலும், இஸ்ரேலின் ராணுவம் வெளியிட்ட தகவலின்படி, இஸ்ரேலிய விமானப்படை 12 இடங்களில் உள்ள ஈரானிய ஏவுகணை களஞ்சியங்கள் மற்றும் ஏவுதளங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
🔴RAW FOOTAGE: The IAF struck 12 missile launch sites and storage facilities in Iran aimed at Israeli civilians.
We will continue to operate to defend our civilians. pic.twitter.com/hPFtBw4JqA
— Israel Defense Forces (@IDF) June 17, 2025
இஸ்ரேலின் பாதுகாப்புப் படைகள், ஈரான் இஸ்ரேலுக்கு எதிராக ஏவுகணைகளை தயாரிக்க எடுத்த முயற்சிகளை காட்டும் காணொளி சாட்சிகளை வெளியிட்டுள்ளது.
அதில், அந்த முயற்சிகள் அடையாளம் காணப்பட்டதும், அதன் மீது நடத்தப்பட்ட தாக்குதல் காட்சியும் அடங்கியுள்ளது.
மேலும், மற்றொரு காணொளியில் ஈரானின் ஒரு விமான எதிர்ப்பு பாதுகாப்பு அமைப்பின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் காட்சியும் இடம்பெற்றுள்ளது.
