இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ட்ஸாசி ஹனெக்பி, ஈரானுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ள இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகள், ஃபோர்டோ அணுஉலை மீது தாக்குதல் நடத்தாமல் நிறைவடையாது என உறுதியாக கூறியுள்ளார்.
ஃபோர்டோ அணு உலை, தரையிலிருந்து சுமார் 90 மீட்டர் (295 அடிகள்) ஆழத்தில் அமைந்துள்ளது. இந்த உலையில் யூரேனியம் செறிவூட்டப் பயன்படும் ஆயிரக்கணக்கான சென்ட்ரிபியூக்கள் உள்ளன.
அமெரிக்க ஆதரவு
இஸ்ரேலின் ஏவுகணைகள் அந்த அளவுக்கு ஆழத்தில் தாக்குவதற்கேற்ப இல்லாததால், அத்தகைய தாக்குதலுக்கு அமெரிக்க ஆதரவு அவசியம் எனக் கருதப்படுகிறது.
இந்த நிலையில், அமெரிக்கா இந்த நடவடிக்கையில் பங்கேற்குமா என தனக்கு தெரியாது என்று கூறிய ஹனெக்பி, அவர்கள் உடன் தொடர்ச்சியாக உரையாடல் நடக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.
நெதன்யாகுவின் நகர்வு
அமெரிக்காவின் முடிவு இன்னும் தெரியவில்லை
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு இடையே தனிப்பட்ட அளவில் உரையாடல்கள் நடைபெற்று வருவதாகவும், இஸ்ரேல் எந்த கட்டத்திலும் அமெரிக்காவின் பங்கேற்பு உறுதி இல்லை என்பதைக் கருத்தில் கொண்டு தங்கள் நடவடிக்கையைத் தொடங்கியதாகவும் ஹனெக்பி குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, அமெரிக்க தேசிய பாதுகாப்பு குழு, ஈரானின் அணுத்திட்டத்துக்கு எதிராகத் தாக்குதலில் பங்கேற்கும் வாய்ப்பு குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக பல ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
