எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அரசின் பொது வேட்பாளராக ஜனாதிபதி ரணில்
விக்கிரமசிங்கவே நிறுத்தப்பட வேண்டும் என்று இராஜாங்க அமைச்சர்கள் அனைவரும்
ஒரே நிலைப்பாட்டில் உள்ளனர்.
இந்த நிலைப்பாட்டை அவர்கள் மொட்டுக் கட்சியின் தலைவர் மகிந்த ராஜபக்சவிடம்
தெரிவித்துள்ளனர் என்று அறியமுடிகின்றது.
இந்த நிலைப்பாட்டின் மூலம் மொட்டுக் கட்சிக்குள் பிளவு ஏற்படாது என அவர்கள்
கூறியுள்ளனர் என்றும் தெரியவருகின்றது.
இதேவேளை, மொட்டுக் கட்சி தனியான வேட்பாளர் ஒருவரை நிறுத்த வேண்டும் என்று
அக்கட்சிக்குள் சிலர் கூறி வருகின்றனர். சிலர் நாமல் ராஜபக்ஷவை வேட்பாளராக
நிறுத்த வேண்டும் என்றும் கூறுகின்றனர்.