முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஆசிரியர்களை கடுமையாக எச்சரித்த ரணில்

பாடசாலை கல்விக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ இடையூறு விளைவிப்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க சட்டமா அதிபரின் ஆலோசனையை கோரியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் இன்று முற்பகல் நடைபெற்ற ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

“ஆசிரியர்கள் ஒழுக்கத்துடன் பணியாற்ற வேண்டும். ஒழுக்கத்தை மீறி கல்வி சேவையை நடத்த முடியாது.

உதவித்தொகை

கடந்த காலங்களிலும் தற்போதும் நடத்தப்படும் ஆசிரியர் வேலை நிறுத்த போராட்டங்களுக்கும் காரணம் இல்லை.

ranil-warns-teachers-who-do-protests

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச 2022ஆம் ஆண்டு சம்பள உயர்வு வழங்கிய ஒரே துறை ஆசிரியர் துறை ஆகும்.

இந்த வருடம் அனைவருக்கும் 10,000 ரூபா உதவித்தொகையை இருமுறை வழங்கினோம்.

எனினும், அடுத்தநாளே பணிப்புறக்கணிப்பு செய்தனர்.

உருவாக்கப்படவுள்ள சட்டம்  

இது தொடர்பாக நான் சட்டமா அதிபருடன் கலந்துரையாடியுள்ளேன்.

இதனால் பெரிதும் பாதிக்கப்படுவது சிங்கள மொழி ஊடாக கல்வி கற்கும் பிள்ளைகளே. ஏனைய மொழி பாடசாலைகள் உரிய பணியை தொடர்கின்றனர்.

ranil-warns-teachers-who-do-protests

காலை 7.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை யாரும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வகுப்புகளை சீர்குலைக்க முடியாதவாறு சட்டத்தினை உருவாக்க ஆலோசனைகளை வழங்கியுள்ளேன்.

இந்த நடவடிக்கை வருங்கால சந்ததியினருக்காக மேற்கொள்ளப்படும். அதற்கு பின் என் மீது கோபம் கொள்ள வேண்டாம். இந்த விடயத்தில் நான் இன்னும் கடுமையாக நடந்து கொள்வேன்” எனத் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.