2024 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பல்வேறு விதமான பிரசார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவே (Anura Kumara Dissanayakke) வெற்றி பெறுவார் என அக்கட்சியின் யாழ். மாவட்ட இணைப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான
சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
யாழில் இன்று (14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு குறிப்பிட்ட அவர் சுமார் 76 வருடங்களாக அரசியல் தலைவர்கள் மக்களை ஏமாற்றியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,