மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பில் உள்ளதாக கூறப்படும் வாகனங்கள் தொடர்பான தகவல்கள் சரியான தகவல் அல்ல என மகிந்த ராஜபக்சவின் ஊடகப்பிரிவு அறிக்கை வெளியிட்டுள்ளது.
எவ்வாறாயினும், ஜனாதிபதி செயலகத்தினால் வழங்கப்பட்ட எழுத்துமூல பணிப்புரையின் பிரகாரம் எதிர்வரும் 21ஆம் திகதி திங்கட்கிழமை மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்பட்ட 6 உத்தியோகபூர்வ வாகனங்களில் 3 வாகனங்களை கையளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
உத்தியோகபூர்வ சலுகைகள்
இதேவேளை, தகவல் திணைக்களத்தின் தகவல்படி, மகிந்த ராஜபக்ச, தாம் பயன்படுத்திய 16 வாகனங்களில் 8 வாகனங்களை ஏற்கனவே திருப்பி அனுப்பியுள்ளதாக கூறப்படுகின்றது.
அதேசமயம் தற்போது ரணில் விக்ரமசிங்கவிடம் 11 வாகனங்கள் உள்ளனதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ சலுகைகள் எதுவும் மீளப்பெறப்படவில்லை எனவும், மகிந்த ராஜபக்ச மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகிய இருவரிடமும் மேலதிக வாகனங்களை மீள ஒப்படைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெளிவுபடுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.