முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பிரகீத் எக்னலிகொடவின் புதிய விசாரணை: அநுர அரசாங்கத்திடம் கோரிக்கை

Courtesy: Sivaa Mayuri

கேலிச் சித்திர ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமல் போனது தொடர்பான வழக்கு விசாரணையை டிசம்பர் 6ஆம் திகதி, புதிய விசாரணையுடன் தொடர்வது தொடர்பில், எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் சங்கம், அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் ஒன்பது இராணுவ புலனாய்வு அதிகாரிகள் தொடர்புடையதாகக் கூறப்படும் நிலையில், நீதித்துறை வெளிப்படைத்தன்மை மற்றும் பாரபட்சமற்றது என்பதை உறுதிப்படுத்துமாறு எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் சங்கம் (RSF), புதிய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. 

ஆங்கில இணையத்தளம் ஒன்றின் கேலிச்சித்திர மற்றும் அரசியல் கட்டுரையாளரான பிரகீத் எக்னலிகொட, 2010இல், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர், தலைநகர் கொழும்புக்கு அருகிலுள்ள ஹோமாகம நகரில், 24 ஜனவரி 2010 அன்று கடத்தப்பட்டார்.

அநுர அரசாங்கத்தின் உறுதி

அவர் காணாமல் போனமை தொடர்பில், இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த ஒன்பது உறுப்பினர்களுக்கு எதிரான வழக்கு விசாரணை, 2019ஆம் ஆண்டு முதல் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில், வழக்கின் புதிய விசாரணை 2014 டிசம்பர் 6ஆம் திகதி ஆரம்பமாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையிலேயே, எல்லைகளற்ற ஊடகவியலாளர்களின் சங்கம் கோரிக்கை வெளியாகியுள்ளது.

பிரகீத் எக்னலிகொடவின் புதிய விசாரணை: அநுர அரசாங்கத்திடம் கோரிக்கை | New Trial Of Prageeth Eknaligoda

கடந்த செப்டம்பரில் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் கூட்டணியான தேசிய மக்கள் சக்தி, அரசியல் கொலைகள் மற்றும் ஊடகவியலாளர்கள் கடத்தல்கள் தொடர்பான விசாரணைகளை விரைவாக முடிப்பதாக உறுதியளித்துள்ளது.

இந்தநிலையில், பிரகீத் எக்னலிகொடவின் குடும்பம் 14 ஆண்டுகளாக அவர் காணாமல் போனது குறித்த பதிலுக்காக ஆவலுடன் காத்திருக்கிறது.

சட்ட நடவடிக்கை

எனவே, இந்த வழக்கின் தற்போதைய விசாரணை வெளிப்படையானதாகவும், பாரபட்சமற்றதாகவும் இருப்பதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு RSF அழைப்பு விடுத்துள்ளது.

பிரகீத் எக்னலிகொடவின் புதிய விசாரணை: அநுர அரசாங்கத்திடம் கோரிக்கை | New Trial Of Prageeth Eknaligoda

இந்தக் குற்றத்திற்குக் காரணமானவர்கள் அரசியல் ரீதியாக இருந்தாலும் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ‘RSF’இன் தெற்காசிய தலைவர் செலியா மெர்சியர் கோரியுள்ளார்.

இதேவேளை, ‘RSF’இன் 2024 ஆம் ஆண்டிற்கான உலக ஊடக சுதந்திர சுட்டெண்ணில், 180 நாடுகளில் இலங்கை 150 வது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.