நடிகை ராஷ்மிகா சமீபத்தில் ஜிம் ஒர்கவுட் செய்தபோது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
அவர் நடக்க முடியாத சூழ்நிலையிலும் தனது அடுத்த பாலிவுட் படமான Chhaava ப்ரோமோஷனில் கலந்துகொண்டு வருகிறார். விக்கி கௌஷல் ஹீரோவாக நடித்து இருக்கும் அந்த வரலாற்று படம் வரும் பிப்ரவரி 14ம் தேதி ரிலீஸ் ஆகிறது.
வீல் சேரில் வந்த ராஷ்மிகா
இன்று ஹைதராபாத்தில் Chhaava பட ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. அதற்கு ராஷ்மிகா வீல் சேரில் மேடைக்கு வந்து இருக்கிறார்.
சேரை தள்ளிக்கொண்டு வந்ததே விக்கி கெளஷல் தான். மேடையில் அவர் வீல் சேரில் இருந்து எழுந்து மேடையில் அமர கஷ்டப்பட்ட போது அவரே உதவி செய்து இருக்கிறார். அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி இருக்கிறது.
Most Adorable Video 👌#VickyKaushal #RashmikaMandanna #JaaneTu #Chhaava pic.twitter.com/Xio10QKSaA
— BollyHungama (@Bollyhungama) January 31, 2025
View this post on Instagram