பாடசாலை மாணவர்களுக்கு எழுதுபொருள் வாங்குவதற்காக அரசாங்கம் வழங்கும் 6,000 ரூபா மதிப்புள்ள வவுச்சரின் செல்லுபடியாகும் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
காலாவதி திகதி
இந்த வவுச்சர்கள், நாளை (15) காலாவதியாகும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது அவற்றின் செல்லுபடியாகும் காலம் எதிர்வரும் மார்ச் 31ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பினை கல்வி அமைச்சகம் ஒரு அறிக்கை மூலம் வெளியிட்டுள்ளது.