மாளவிகா மோகனன்
தென்னிந்திய சினிமா ரசிகர்கள் கொண்டாடும் பிரபல நடிகைகளில் ஒருவர் மாளவிகா மோகனன். ரஜினியின் பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமான இவர் பின் தனுஷுடன் இணைந்து மாறன் என்ற படத்தில் நடித்தார்.
ஆனால் அந்த படம் இவருக்கு சரியான வரவேற்பை பெற்று கொடுக்கவில்லை. அதை தொடர்ந்து, கடந்த வருடம் விக்ரம் நடித்த தங்கலான் படத்தில் வித்தியாசமான லுக்கில் நடித்திருந்தார்.
அந்த படமும் இவருக்கு பெரிய அளவில் ரீச் பெற்று தரவில்லை. தற்போது சர்தார் 2 படத்தில் பெரிய நம்பிக்கையுடன் நடித்து வருகிறார்.
வெளிநாட்டில் ஸ்டைலிஷ் லுக்கில் நடிகை பிரியங்கா மோகன்.. சில லேட்டஸ்ட் கண்கவரும் போட்டோஸ்
அதிர்ச்சியூட்டும் சம்பவம்
இந்நிலையில், மும்பையில் கல்லூரி படித்தபோது மாளவிகா சந்தித்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் குறித்து வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.
அதில், ” எனக்கு தற்போது சொந்தமாக கார் மற்றும் அதற்கு டிரைவர் உள்ளார். எனவே மும்பை பாதுகாப்பானதா என்று என்னிடம் கேட்டால், ஆம் என்று சொல்லுவேன்.
ஆனால், நான் கல்லூரியில் படிக்கும்போது இந்த பாதுகாப்பை உணரவில்லை. ஒரு முறை லோகல் ரெயிலில் நானும் எனது நண்பர்களும் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தோம்.
அப்போது எங்களை பார்த்து ஒருவர் ஜன்னல் அருகே வந்து, கம்பிகளுக்கு அருகில் முகத்தை வைத்து, எனக்கு ஒரு முத்தம் தருவாயா?” என்று கேட்டார். அதை கேட்டு அதிர்ச்சி அடைந்துவிட்டேன்” என கூறியுள்ளார்.