முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மட்டக்களப்பிற்கான நிதியை அச்சத்தில் குறைத்தாரா அநுர.. சாணக்கியன் கேள்வி

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இம்முறை ஜனாதிபதியால் அபிவிருத்திக்கு ஒதுக்கிய
நிதி வெறுமனே 51 மில்லியன் மாத்திரமே. ஏன் அவரது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு அபகரித்து விடுவார் என்ற பயத்தினாலா குறைந்த நிதி
ஒதுக்கீட்டை வழங்கியிருக்கின்றார் என மட்டக்களப்பு மாவட்ட தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், “ஊழல்
மோசடிகளற்ற ஆட்சியை நடத்திய மாநகரசபை ஆட்சியாக எமது கட்சியின் ஆட்சியே.
கடந்த காலங்களிலே எமது ஆட்சியில் சட்டவிரோதமான வேலைகளை செய்து தர
கேட்டுக்கொண்டவர்கள் இன்று வேறு சின்னங்களில் கேட்கின்றார்கள்.

இலங்கை தமிழரசு
கட்சிக்கு அதிக வாக்குகள் கிடைக்கும் சங்கு சின்னத்திற்கு வாக்குகள்
கிடைக்காது என்பதற்காக மட்டக்களப்பு மாநகரசபைத் தேர்தலில் சங்கு சின்னத்தில்
போட்டியிட தைரியமில்லாமல் வேறு வேறு சின்னங்களில் போட்டி போடுகின்றது.

51 மில்லியன்

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இம்முறை ஜனாதிபதியால் அபிவிருத்திக்கு ஒதுக்கிய
நிதி வெறுமனே 51 மில்லியன் மாத்திரமே. ஏன் அவரது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு அபகரித்து விடுவார் என்ற பயத்தினாலா குறைந்த நிதி
ஒதுக்கீட்டை வழங்கியிருக்கின்றார்?

கிழக்கு மாகாணத்திற்கு இலங்கை அரசாங்கத்தினால் அபிவிருத்திக்கு நிதி
ஒதுக்கவில்லை. இந்தியாவின் ஒதுக்கீட்டின் மூலமே அபிவிருத்தி செய்யப் போவதாக
ஜனாதிபதியே சொல்லி இருந்தார்.
கடந்த நாடாளுமன்றத்திலே மட்டக்களப்பு மாவட்டம் மாத்திரம் தமிழரசுக் கட்சியை
வெற்றிபெறச் செய்தது.

இந்த உள்ளூராட்சியில் வடக்கு – கிழக்கு தமிழர் தாயகம்
முழுவதும் தமிழரசுடன் இருக்கின்றது என்ற செய்தியை நாங்கள் இந்த அரசுக்குச்
சொல்ல வேண்டும்.
எமது பிரதேசங்ளைப் பற்றி தெரிந்தவர்களே இந்தப் பிரதேசத்தை ஆட்சி செய்ய
வேண்டும்.

தென்னிலங்லையில் இருந்து வந்து அநுரகுமார இங்கு ஆட்சி செய்ய
வேண்டியதில்லை. அவருடன் இணைந்திருக்கும் புல்லுருவிகள் ஆட்சி செய்ய முடியாது” என குறிப்பிட்டுள்ளார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்