முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

விரைவில் ஆட்சியைக் கைப்பற்றுவோம்..! நாமல் அம்பாந்தோட்டையில் சூளுரை

 2029 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஆட்சியை கைப்பற்றுவோம் என சிறிலங்கா பொதுஜன பெரமுன தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச எம்.பி. சூளுரைத்துள்ளார்.

அம்பாந்தோட்டைப் பகுதியில் நேற்று
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறிலங்கா
பொதுஜன பெரமுனவின் (SLPP) உள்ளூராட்சி
மன்ற
வேட்பாளர்களுடனான சந்திப்பின் போதே
அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது “நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அதிகளவான உள்ளூராட்சி அதிகார சபைகளை நாங்கள் கைப்பற்றுவோம்.

உள்ளூராட்சி அதிகார சபை

2018 ஆம்
ஆண்டு உள்ளூராட்சி அதிகார சபைகளைக் கைப்பற்றியதை போன்று இம்முறையும் நாங்கள் அதிகாரத்தை
கைப்பற்றுவோம்.

தேசிய பொருளாதாரத்தை கைப்பற்ற
வேண்டுமாயின் கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும்.

எமது
ஆட்சியில் கிராமிய பொருளாதாரத்தை
அபிவிருத்திகளுக்கு விசேட திட்டங்களை
முன்னெடுத்தோம். ஆகவே, கிராமிய
மக்கள் கிராமத்தின் அதிகாரத்தை மீண்டும் எமக்கு ஒப்படைப்பார்கள்.

தேசிய பொருளாதாரத்தையும் கிராமிய பொருளாதாரத்தையும் மேம்படுத்
துவதற்கு தேசிய மக்கள் சக்தி தேர்தல்
காலத்தில் பல வாக்குறுதிகளை வழங்கியது.

வீதியில் இறங்கி போராட்டம்

இருப்பினும் அந்த வாக்குறுதிகள்
ஏதும் நிறைவேற்றப்படவில்லை. கிராமிய
பொருளாதாரம் நவீனமயப்படுத்தப்பட
வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.

விவசாயம் மற்றும் கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு கடந்த
காலங்களில் முன்னெடுத்த புதிய திட்டங்களுக்கு மக்கள் விடுதலை முன்னணியே எதிர்ப்பை வெளிப்படுத்தியது.

அரசின் செயற்பாடுகளுக்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்
என்று தற்போது அழைப்பு விடுக்கும்
ஆளுங்கட்சியினர் தான் கடந்த காலங்களில் அரசின் அனைத்து திட்டங்களுக்கும்
எதிராக வீதியில் இறங்கி போராட்டத்தில்
ஈடுபட்டார்கள்.

நாட்டின் நலனைக் கருத்திகல்
கொண்டு எடுக்கும் சிறந்த தீர்மானங்க
ளுக்கு நாங்கள் ஒத்துழைப்பு வழங்கு
வோம். இந்த அரசு ஆறு மாத காலப் பதவியை நிறைவு செய்துள்ளது.

இருப்பி
னும் எவ்விதமான புதிய திட்டங்களும்
இதுவரையில் செயற்படுத்தப்படவில்லை என்றார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.