படைத்தரப்பின் ஆளணி வளம் குறைக்கப்படக் கூடாது என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இராணுவப் படையினரின் எண்ணிக்கையை குறைப்பதன் மூலம் கிடைக்கும் 80 பில்லியன் ரூபாவினைக் கொண்டு நாட்டை கட்டியெழுப்ப முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

தேசியப் பாதுகாப்பு விவகாரத்தில் சர்வதேச நாணய நிதியத்தினால் தலையீடு செய்ய முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தான் எதிர்பார்க்கும் தேசியப் பாதுகாப்பு நாட்டில் கிடையாது எனவும் பொது மக்கள் பாதுகாப்பிலும் இடைவெளி காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
புலம்பெயர் நாடுகளில் வாழ்ந்து வரும் ஒரு தொகுதி தமிழர்கள் இலங்கையில் இனவழிப்பு நடத்தப்பட்டதாகக் கூறி அந்தந்த நாடுகளில் தங்களின் இருப்பினையும் வீசாக்களையும் நீடித்துக்கொள்ள முயற்சிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
தேசிய போர்வீரர் தினமன்று ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க சமாதானத்திற்காக இடம்பெற்ற போர் என கூறியதனை ஏற்க முடியாது என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
சமாதானத்திற்காக தலாதா மாளிகை மற்றும் ஶ்ரீமஹா போதி மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்காது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டின் தேசியப் பாதுகாப்பு விவகாரம் பொருத்தமான அறிவாற்றல் உடைய ஒருவரிடம் ஒப்படைக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.
இராணுவ முகாம்கள் அகற்றப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

