உள்ளூராட்சி மன்றங்களில் அதிகாரத்தை நிறுவ யாருக்கும் தனி அதிகாரம்
வழங்கப்படவில்லை என்றும், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் ஆதரவு இலங்கை
தொழிலாளர் காங்கிரஸுக்கா அல்லது தேசிய மக்கள் சக்திக்கா வழங்கப்படும் என்பது
குறித்து அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம்
தெரிவித்துள்ளார்.
தொழிலாளர் தேசிய முன்னணி மற்றும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய சபை
கூட்டம் (15) அன்று ஹட்டனில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நாடாளுமன்ற
உறுப்பினர் பழனி திகாம்பரம் தலைமையில் கூடிய பின்னர் ஊடகங்களிடம் கருத்து
தெரிவிக்கையில்,
“ஏனைய கட்சிகளுடன் இணைந்து தான் உள்ளூராட்சி மன்றங்களில் அதிகாரத்தை கைப்பற்ற
வேண்டும்.
பேச்சுவார்த்தை
ஆனால், உள்ளூராட்சி மன்றங்களில் அதிகாரத்தை நிறுவுவது தொடர்பாக
இதுவரை எந்த அரசியல் கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை.
உள்ளூராட்சி மன்றங்களில் அதிகாரத்தை நிறுவுவது குறித்து விவாதிக்க தனது
கூட்டணிக்கு பல அரசியல் கட்சிகள் அழைப்பு விடுத்திருந்தாலும், அந்த அரசியல்
கட்சிகள் யாருடனும் இவ்விடயம் குறித்து பேசவில்லை.
சில உள்ளூராட்சி
மன்றங்களுக்கு எமது அனுமதி இல்லாமல் உறுப்பினர்கள் சிலர் ஆதரவு
வழங்கியுள்ளனர்.
அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.