ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில்
அமெரிக்காவுக்கும் ஜப்பானுக்கும் விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூயோர்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை அமர்வுகளில் செப்டம்பர்
24ஆம் திகதியன்று ஜனாதிபதி உரையாற்றவுள்ளார்.
அதைத் தொடர்ந்து ஜப்பானுக்கு அரசு முறை விஜயத்தை அவர் மேற்கொள்ளவிருக்கிறார்.
ஜப்பானுக்கும் விஜயம்
செப்டம்பர் 27 ஆம் திகதியன்று ஜப்பானுக்கு செல்லும் அவர், செப்டம்பர் 29 ஆம்
திகதி ஜப்பானிய பிரதமருடன் சந்திப்பை நடத்தவுள்ளார்.

டோக்கியோவில் நடைபெறும் கலந்துரையாடல்களின்போது, ஜப்பானில் இலங்கையர்களுக்கு
அதிக வேலை வாய்ப்புகளைப் பெறுவது உட்பட்ட விடயங்கள் கலந்துரையாடப்படவுள்ளதாக
வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் இலங்கையில் ஒரு வாகன பொருத்துதல் தொழிற்சாலையை அமைப்பதற்கு, இலங்கை
அரசாங்கம் ஜப்பானிடம் முன்மொழிவு ஒன்றை சமர்ப்பிக்கும் என்றும்
எதிர்பார்க்கப்படுகிறது.

